செய்திகள்

சபரிமலையில் பெண்களுக்கு தடை 200 ஆண்டுகளாக இருக்கிறது – ஆய்வு நூலில் அம்பலம்!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர்.

இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனை எதிர்த்த போலி சமூக அக்கறையாளர்கள் பலவருடங்களுக்கு முன்னர் பெண்கள் சபரிமலைக்கு சென்று வந்துள்ளனர் என்ற வாதத்தை முன்வைத்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று நேற்றல்ல, 200 ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது என்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் ராணுவ பிரிவில், அதிகாரிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் பெஞ்சமின் சுவைன் வார்டு, பீட்டர் எயர் கான்னர் ஆகிய இருவரும் 5 ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தி, ‘மெமோய்ர் ஆப் தி சர்வே ஆப் தி ட்ரவாங்கூர், கொச்சின் ஸ்டேட்ஸ்’ (திருவாங்கூர், கொச்சி மாநிலங்களின் ஆராய்ச்சி நினைவுகள்) என்ற தலைப்பில் ஆய்வு நூல் எழுதி, 1893, 1901 ஆண்டுகளில் 2 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

அந்த புத்தகத்தில், “வயதான பெண்கள், சிறிய பெண்கள் (10 வயதுக்குட்பட்டவர்கள்) சபரிமலைக்கு செல்லலாம். ஆனால் பருவ வயதை அடைந்து, குறிப்பிட்ட காலகட்டம் வரையில் அங்கு பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பகுதியில் எல்லா பாலுறவுகளும் தெய்வத்துக்கு (அய்யப்பனுக்கு) வெறுப்பை ஏற்படுத்துவதாகும்” என கூறப்பட்டுள்ளது. இதை சபரிமலை தீர்ப்பில் 4 நீதிபதிகளின் தீர்ப்புடன் ஒத்து போகாமல், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாதது சரிதான் என தீர்ப்பு எழுதிய நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார்.

Reference – Indian Express

Tags
Show More
Back to top button
Close
Close