செய்திகள்

சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு..!

சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சபரிமலை மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நேற்று இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், தடையை நீட்டிக்க கேரள காவல்துறையினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, கேரள காவல்துறை கண்காணிப்பாளர் அவமதித்துள்ளார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க-வினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close