செய்திகள்

2 கோடி வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் சமையல் எரிவாயு – பசுமைக்கு மாறும் இந்தியா!

சமையல் எரிவாயுவை நேரடியாக குழாய் மூலம் சமையல் அறைக்கே கொண்டு செல்லும் திட்டம் சில நகரங்களில் மட்டுமே தற்போது செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் 18 மாநிலங்களில் 122 மாவட்டங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

நாட்டின் உள் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த திட்டம் முதல் படியாக விளங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 70 சதவீதம் மக்கள் பயன்பெற வாய்ப்பு உருவாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க எரிசக்திக்கான தேவையும் உயர்கிறது. எனவே சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எரிசக்தியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு வரை 66 மாவட்டங்களில் மட்டும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இன்று அந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 400 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிசக்தி தயாரிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக வாகனங்களுக்கு மட்டுமின்றி சமையல் எரிவாயும் குழாய் மூலம் நேரடியாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு தற்போது 32 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மொத்தம் 2 கோடி வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்க முடியும்.  இதுமட்டுமின்றி வாகனங்களுக்கு காஸ் வழங்கும் நிலையங்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

Show More
Back to top button
Close
Close