செய்திகள்

முஸ்லீம்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் பா.ஜ.க வெற்றி பெற்று விடும் – காங்கிரஸ் மூத்த தலைவரின் சர்ச்சை வீடியோ!

230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28–ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வீடியோவின் உண்மைத்தன்மை தெளிவாகவில்லை. முஸ்லீம்களின் வாக்கு வங்கியை 90% கைப்பற்ற வேண்டும் என்று கமல்நாத் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

முஸ்லீம்களின் அதிகமான வாக்கை பெறாவிட்டால் காங்கிரசுக்கு பின்னடைவாக அமையும் என்று அவர் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. காங்கிரஸ் மத ரீதியில் பிரசாரம் மேற்கொள்கிறது என்பதற்கு வீடியோவே ஆதாரம் என பா.ஜ.க கூறியுள்ளது.

இந்த வீடியோ பதிவில் கமல்நாத் முஸ்லீம் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது 90 சதவீத முஸ்லீம்களின் வாக்குகள் காங்கிரசுக்கே கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகிறார். 90 சதவீதம் முஸ்லீம்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் பா.ஜ.க வெற்றி பெற்று விடும் என்றும் காங்கிரஸ் கடுமையான இழப்பை சந்திக்க நேரும் என்றும் அந்த வீடியோவில் கமல்நாத் கூறுகிறார். வரும் 28-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த வீடியோ காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம் வாக்கு வங்கியை காங்கிரஸ் கட்சி விலை கொடுத்து வாங்க முயற்சிப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close