செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தமிழக அரசு பேருந்துகள்!

சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அரசு சிறப்பு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணச்சீட்டு எடுக்க மறுத்து பயணிகள் போராடியதால் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டதாக பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல அரசு பேருந்தில் ₹155 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், கார்த்திகை தீபதிற்காக ₹175 வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அறிவிக்கப்படதாக இந்த கட்டண உயர்வை கண்டித்த பயணிகள் பேருந்தில் கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுக்க முடியாது என கூறி நடத்துனருடன் வாக்கு வாதம் செய்தனர்.

இதையடுத்து கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. ₹175 செலுத்தி செல்ல விரும்புவோர் இந்த பேருந்தில் செல்லலாம். ₹155 தான் செலுத்துவேன் என்றால் பேருந்தில் இருந்து இறங்கி கொள்ளுங்கள் என்று மிரட்டும் வகையில் பேசியதால் பயணிகள் வேறு வழியின்று கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க சம்மதித்ததால், பேருந்து புறப்பட்டு சென்றது என்று கூறப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு செல்லும் அப்பாவி ஹிந்துக்கள் மீது அதிக கட்டண சுமையை விதிக்கும் தமிழக அரசு, வேறு மத சடங்கிற்காக வெளியூர் செல்லும் போது இதே போல் கட்டணம் அதிகரிக்கப்படுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Show More
Back to top button
Close
Close