செய்திகள்

விவசாய பொருட்களுக்கு மானிய விலை – விவசாயிகள் மகிழ்ச்சி !

உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதால் மகசூல் அதிகரிக்கும் என மதுரை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு நல்ல மழை கிடைத்துள்ளதாலும், பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாலும், சோழவந்தான் அருகே உள்ள மேலகால் பகுதியில் ஏராளமான விவசாயிகள் நாற்று நடும் பணியில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதைகள் உள்ளிட்டவைகளை மத்திய மாநில அரசு மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மகசூல் அதிகரித்து வாழ்வாதாரம் செழிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Input and Credits : Dhinasuvadu

Tags
Show More
Back to top button
Close
Close