செய்திகள்

சபரிமலையில் 144 தடை உத்தரவுக்கு இப்போது அவசியம் என்ன..?

சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது ஏன் என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சபரிமலையில் இளம் பெண்களும் தரிசனம் நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், சபரிமலையில் நாளுக்குநாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் வருகையை கண்டித்து போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் சபரிமலை முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்நிலையில்  2 மாதகால மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த 16ம்தேதி திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது முறையாக இப்போதும் 144 தடைஉத்தரவு போடப்பட்டது.

தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்துக்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள், போராட்டக்காரர்கள் எவ்வாறு அடையாளம் காணப்படுகின்றனர் என்பது குறித்தும் மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

Tags
Show More
Back to top button
Close
Close