செய்திகள்

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட கேரளா போலீஸ்!

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை தரிசனத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டது, பா.ஜ.க தலைவர்கள் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தரிசனத்திற்கு பிறகு வந்த அமைச்சர் அரசு தேவையற்ற முறையில் பக்தர்களை தொந்தரவு செய்வதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க தலைவர்கள் மற்றும் எஸ்.பி.யதீஷ் சந்திரா இடையே ஒரு வார்த்தை போராட்டமே அங்கு நடந்தது.

இதையடுத்து அரசு பேருந்தில் ஏறி பக்தர்களுடன் அரசு பேருந்தில் சபரிமலை கோயிலில் தரிசனம் சென்றார் அமைச்சர். தரிசனம் முடித்து விட்டு இன்று அதிகாலை திரும்பும் வழியில், பம்பை காட்டுப்பகுதியில் அவரது வாகனத்தை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மத்திய அமைச்சர் என்று தெரிந்ததும் மன்னிப்பு கேட்டு காவல்துறையினர் கடிதம் கொடுத்தனர்.

Pic Credits – Manormana

Tags
Show More
Back to top button
Close
Close