செய்திகள்

உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடு இந்தியா..!

உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடு இந்தியா என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார். வியட்நாமில் சுற்றுப் பயணம் முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியாக சென்ற அவருக்கு சிட்னி நகரில் இந்திய வம்சாவாளியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அந்த நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந், கடந்த காலாண்டில் இந்தியா 8 புள்ளி 2 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியிருப்பதாக குறிப்பிட்டார்.

முன்னதாக வியட்நாம் சென்ற அங்குள்ள குவாங் நாம் மாகாணத்துக்கு உட்பட்ட டய் பு கிராமத்துக்கு அருகே உள்ள பழமையான இந்து கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் தனது வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டார். இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் ‘என் மகன்’ கோவில் காம்ப்ளக்ஸ் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் சிவன் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. கி.பி. 4 மற்றும் 14-ம் நூற்றாண்டுக்கு இடையே சம்பா பேரரசர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது பாழடைந்து காணப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close