இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் விரட்டி அடிக்கிறது பினராயி தலைமயிலான கேரள அரசின் காவல்துறை. கேரள செய்தியான ஜனம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், மும்பையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை சபரிமலை செல்ல விடாமல் கேரள காவல்துறை தடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வயதான பெண்கள், குழந்தைகள் உள்பட அனைத்து பக்தர்கள் மீதும் அடக்குமுறையை கையாண்டுள்ளது கேரள காவல்துறை.

இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்களை கொதிப்படைய செய்துள்ளது. கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில் ஹிந்துக்களின் அடிப்படை மத உரிமை மறுக்கப்பட்டுள்ளது கேரள அரசின் ஹிந்து விரோத போக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Share