செய்திகள்

ஆம்பூர் பிரியாணியா இல்லை நாய் பிரியாணியா ? நாய் பிரியாணி விற்ற 2 பேர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாட்டிறைச்சி என்ற பெயரில் 1 டன் நாய்க்கறி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து, பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஆம்பூர் பிரியாணி என்பது தென் இந்தியா முழுவதும் பெயர் போன பிரியாணி வகை. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்பூர் என்ற ஊரில் விற்கப்படும் பிரியாணியை உள்ளூர் வாசிகள் மட்டும் அல்லாமல் வெளியூரில் இருந்தும் பலரும் வந்து சாப்பிடுவர். ஆம்பூரில், குறிப்பிட்ட சமூகத்தினரால் நடத்தப்படும் சிறிய பிரியாணி கடை ஒன்றில் மலிவு விலைக்கு மட்டன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. எனினும் அவர்கள் விற்பனை செய்யும் பிரியாணியில் சந்தேகித்த சிலர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறை அந்த பிரியாணி கடைக்கு சென்று, பிரியாணி சமைக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அங்கு ஆட்டுக்கறியுடன் நாய்க்கறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை அந்த கடையை நடத்தி வந்த 2 வாலிபர்களை கைது செய்தனர் என்று இந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இச்சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 arrested in Ambur for adding Dog meat in Biriyani, as reported by a Tamil Daily
ஆம்பூரில் பிரசித்தி பெற்ற வேறு எந்தெந்த கடைகளில் இது போன்று நாய் பிரியாணி விற்கப்படுகிறது என்ற கேள்வி பிரியாணி பிரியர்களிடையே எழுந்துள்ளது.
Image Credits : Asianet Tamil
Tags
Show More
Back to top button
Close
Close