இந்தியா

உலகில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் தர வரிசைப் பட்டியலில் இந்தியா முதல் 50 இடத்துக்கு முன்னேறும் கனவை நனவாக்க பிரதமரின் அடுத்தகட்ட நடவடிக்கை..!

உலகில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் தர வரிசைப் பட்டியலை உலக வங்கி தயாரித்து அளித்திருந்தது. கடந்த மாதம் வெளியான இந்த பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்து உள்ளது. பிரதமர் மோடி ஆட்சியமைத்த பின் எல்லா வருடமும் இந்தியா இதில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. கடந்த 2016-ம் வருடம் 153-வது இடத்தில் இருந்தது. அதற்கு முந்தைய வருடம் 165-வது இடத்தில் இருந்தது. இப்படி வரிசையாக இந்தியா உலகில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

உலக வங்கி பல அடிப்படை விஷயங்களை வைத்து இதை தீர்மானிக்கிறது. ஒரு தொழில் தொடங்க எப்படி சூழல் உள்ளது, இதற்கு முன் தொடங்கியவர்கள் எப்படி இருக்கிறார்கள், கட்டுமான துறை எப்படி உள்ளது, மின்சார வசதி, கடன் வசதி, வரி எப்படி வாங்குகிறார்கள், எல்லை தாண்டிய வர்த்தக அனுமதி எப்படி உள்ளது, ஒப்பந்தம் எப்படி நடக்கிறது என்று பல விஷயங்களை மையமாக வைத்து நாடுகளை தரம்பிரிக்கிறது. இந்தப் பட்டியலில் முதல் 50 நாடுகளில் இந்தியா இடம் பிடிக்க வேண்டும் என்பது மத்திய பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசின் கனவாக அமைந்துள்ளது.

இந்த கனவை நனவாக்குவதற்காக மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் சார்பில் டெல்லியில் நேற்று கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, இந்திய தொழில் மற்றும் வர்த்தக தொடர்புடைய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.இதில் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட முன்னணி தொழில் அதிபர்களும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது, நாட்டில் எளிமையாக தொழில் தொடங்க உகந்த சூழல்களை மேம்படுத்தவும், சீர்திருத்தவும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags
Show More
Back to top button
Close
Close