இந்தியாசெய்திகள்

15 ஆண்டுகால வரலாற்றில் பா.ஜ.க படைத்த சாதனை – 55 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அரங்கேறிய வேதனை.!

காங்கிரஸ் ஆட்சியில் தொலைபேசியில் பேசிக் கடன் கொடுக்க சொன்னதால் வங்கிகள் சீர்குலைந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள மகாசமுந்த் என்னுமிடத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது தொலைபேசி வங்கிச் சேவையால் வங்கிகள் அழிந்துவிடும் எனக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் தொலைபேசியில் பேசித் தொழிலதிபர்களுக்குக் கடன் கொடுக்கச் சொன்னதையும், கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகள் சீர்குலைந்ததையும் மோடி சுட்டிக்காட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை எனத் தெரிவித்தார். நான்கு தலைமுறையாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தைப் பற்றித் தான் சிந்தித்ததாகவும், மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றும் மோடி தெரிவித்தார். அப்படிப்பட்டவர்கள் தற்போது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள் என எப்படி நாம் நம்ப முடியும்?

காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். பட்டியல் இன பிரிவை சேர்ந்த அவரை 5 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக நீடிக்க அனுமதிக்கவில்லை. சோனியா காந்தியை தலைவராக்குவதற்காக சீதாராம் கேசரியை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால், கடந்த 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் சத்தீஷ்காரில் முதல் மந்திரி ராமன் சிங்கால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. பின்னர் மத்தியில் எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஒரு கூட்டுறவு ஆட்சியை உருவாக்க முடிந்தது. இந்த பிரச்சினையை குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது நானும் சந்தித்து இருக்கிறேன்.

சத்தீஷ்காரில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து இருக்கிறது. கர்நாடக தேர்தலின் போதும், அங்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அந்த கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் தற்போது மதசார்பற்ற ஜனதா தளத்துடன் அங்கு கூட்டணி ஆட்சி அமைத்து இருந்த போதும், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மாறாக கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, விவசாயிகளின் நலனுக்காக இரவு–பகல் பராமல் உழைத்து வருகிறது. எனவே தங்கள் முன்னோரை ஏழ்மை நிலையில் வைத்திருந்த கட்சி எது? என்பதை மனதில் கொண்டு இளைஞர்கள் உள்பட அனைவரும் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டும். மேலும், மத்திய பிரதேசத்தின் 15 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியுடன் 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிட முடியுமா? என காங்கிரஸ் தலைவர்களுக்கு அவர் சவாலும் விடுத்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close