இந்தியா

பிரதமரின் அழைப்பை ஏற்ற தென்னாப்பிரிக்க அதிபர்..!

அடுத்த ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டங்களில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி தனது அமெரிக்கப் பயணத்தின் போது இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அமெரிக்க அதிபரின் நிகழ்ச்சி நிரல் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி அவரால் இந்தியாவுக்கு வரமுடியாது எனறு வெள்ளை மாளிகைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் மோடி இந்திய சுதந்திர தினத்தில் பங்கேற்க தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுக்கு அழைப்பு விடுத்தார். அதனை ரமபோசாவும் ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2016 இல்,இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையே சுற்றுலாத் துறையில் கூட்டுறவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.07.2016 அன்று கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா பரஸ்பரம் சுமூகமான மற்றும் நட்புணர்வான உறவை கொண்டுள்ளன. தென்னாப்பிரிக்கா இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கு ஆதாரச் சந்தையாக மாறிவருகிறது.இந்தியா, மின்னணு சுற்றுலா விசா (இ.டி.வி) வசதியை தென்னாப்பிரிக்க மக்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதால், இரு நாடுகளும் சுற்றுலாத் துறையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close