செய்திகள்

ஆளும் அ.தி.மு.க அரசை பாராட்டிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

கஜா புயலின் சீற்றத்திலிருந்து 70,000திற்கும் மேற்பட்ட மக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு அளித்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு. பேரிடர் மேலாண்மை வாரியத்தின் முன்னேற்பாடுகள் காரணத்தால் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், “கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், நாம் அனைவரும், நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும். புயல் எச்சரிக்கை வந்த காலத்திலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் எனது பாராட்டுகள். பாதுகாப்பு பணிகள் தொடரவேண்டும்.”, என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags
Show More
Back to top button
Close
Close