கஜா புயலின் சீற்றத்திலிருந்து 70,000திற்கும் மேற்பட்ட மக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு அளித்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு. பேரிடர் மேலாண்மை வாரியத்தின் முன்னேற்பாடுகள் காரணத்தால் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

இதனை தொடர்ந்து, இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் திரு மு.க ஸ்டாலின், “கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு
மீண்டும் பாதித்துள்ளது. பேரிடர் மேலாண்மை வாரியத்தின் முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!”, என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

Share