செய்திகள்

இடை தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பணத்தை வாரி இறைக்கிறதா தி.மு.க ?

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறிவரும் சூழலில், அரசியல் கட்சிகளும் தகவல் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துக்கொண்டு தங்களின் கொள்கைகளை நேரடியாக மக்களிடம் கொண்டுசெல்ல பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக தனித்த அணியாக இல்லாமல் செயல்பட்டு வந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி, தற்போது முழுமையாக களத்தில் இறங்கியிருக்கிறது. தி.மு.க-வின் கொள்கைகள், செயல்பாடுகளை காலத்திற்கு ஏற்றவகையில் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுசெல்லும் வகையில் திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு கடந்த ஆண்டு உருவாக்கபட்டது.

தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட, தொகுதிவாரியான தேர்வின்போது நிர்வாகிகளின் பேஸ்புக் பக்கங்களின் முந்தைய பதிவுகளை ஆராய்ந்து இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் போடப்பட்ட பதிவு எப்படி இருந்தது. அந்த கருத்துகள் கட்சிக்கு எந்தளவில் பயனாக இருக்கிறது என்பதையும் பார்க்கிறார்கள். அதன் பின்னரே நேர்காணல் நடத்தபட்டு இருக்கிறது. நேர்காணல் முடிந்த பின்னர் மாவட்ட செயலாளர்களிடம்  கட்சியின் செயல்பாடுகளில் நிர்வாகிகளின் நிலைப்பாடு என்ன? என்பதை விசாரித்த பின்னரே நியமித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை அலுவலகம், அறிவாலயத்தில் நேற்று திறக்கப்பட்டது. சமூக வலைதளங்கள் வாயிலாக, இளைய தலைமுறையினரின் ஓட்டுக்களை கவர, தி.மு.க., தலைமை திட்டமிட்டு உள்ளது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு, சென்னை, அறிவாலயத்தில், அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், கட்சி பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலர் டி.ஆர்.பாலு மற்றும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள, 20 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தை, சமூகவலைதளங்கள் வாயிலாக முன்னெடுப்பது குறித்து, தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு, ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவுக்காக தனி அலுவலகமே திறக்கும் அளவிற்கு, தேர்தலை மனதில் வைத்து கொண்டு தி.மு.க காசை வாரி இறைப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிப்படுகின்றன.

Tags
Show More
Back to top button
Close
Close