செய்திகள்

16 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்த கம்பம் நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஷேக் அப்துல்லா : 7 ஆண்டுகள் சிறை #பாலியல்குற்றவாளிதிமுக ?

16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று விகடன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை சேர்ந்த 16-வயது சிறுமி தனது தாத்தா ஊரான கம்பத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி ஷேக் வந்துள்ளார். இவருக்கும் சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஷேக் அப்துல்லா, அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி, மதுரைக்கு கடத்திச் சென்று கொடூரமாக கற்பழித்துள்ளார். விவரம் அறிந்த சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில், 2016-ஆம் ஆண்டு, ஜூன் 1-ம் தேதி, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஷேக் அப்துல்லா மீது வழக்கு பதியப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு, தேனி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், நேற்று (15.11.2018) வழக்கு விசாரணை முடிந்து குற்றவாளிக்கு 7 வருட கடுங்காவல் தண்டனையும், ₹5,000 அபராதமும், அபராத தொகையைக் கட்டத் தவறினால், 1 வருட சிறைத்தண்டனையும் விதித்து, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பந்தப்பட்ட ஷேக் அப்துல்லா, கம்பம் நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவருக்கு, ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க-வில் எப்படி பதவி வழங்கப்பட்டது என்ற கேள்வி தேனி மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது. தொடர்ந்து கிரிமினல் குற்றங்களில் தனது தடத்தை பதித்து வரும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, ஆளுங்கட்சி ஆனால் என்ன நேரும் என்பது தமிழர்களின் பயமாக இருக்குகிறது.

 

Input & Picture Credits : Vikatan

Show More
Back to top button
Close
Close