செய்திகள்

உலக வங்கியின் “எளிதில் மின்சாரம்” தரவரிசையில் 73 இடங்கள் முன்னேறி 26 வது இடத்தில் இந்தியா- உலக நாடுகள் வியப்பு

உலக வங்கியின் “எளிதில் மின்சாரம் மற்றும் அனைவருக்கும் மின்சாரம்” தரவரிசையில் 2014 ஆம் ஆண்டு 99 வது இடத்தில் இருந்த இந்தியா, நான்கு வருடத்தில் 26 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதாவது 73 இடங்கள் முன்னுக்கு சென்றுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரத்தை எடுத்துச் சென்றதன் மூலம், அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதை எளிதாக்கியதன் மூலம், மலிவான மின்சாரத்தை கொடுத்ததன் மூலம் இந்த முன்னேற்றம் அடைந்துள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து கிராமத்திற்கு மின்சாரம் எடுத்து சென்றதன் பிறகு, இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை கொண்டு அரசு செயல்ப்படுகிறது. “ஒரு நபர் மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியும். உள்கட்டமைப்பு இருந்தால் … அது 24 மணி நேரத்தில் கிடைக்கும். ஒரு உள்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றால் அவர் ஒரு வாரத்திற்குள் குறைவாக பெற வேண்டும், “என்று அமைச்சர் கூறினார்.

அரசாங்கத்தின் கிராமிய மின்சாரத் திட்டம் துரிதமாக தொடர்கிறது, 13,000 கிராமங்களில் மொத்தம் 18,452 மின் வழங்கல் 1,000 நாட்களுக்குள் முடிக்கப்பட உள்ளது. இந்தியாவின் இந்த துரிதாமான் திட்டத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன.

Tags
Show More
Back to top button
Close
Close