இந்தியாவில் பிராந்திய கட்சிகளிலேயே பணக்கார கட்சியாக திகழ்வது தி.மு.க தான் என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வருடாந்திர வருமான வரி அறிக்கைகளின் படி, ₹35 கோடி அதிகம் ஈட்டப்பட்டு, தி.மு.க முன்னிலை வகிக்கிறது என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், மூன்றாவது இடத்தில் சந்திர பாபு நாயுடு தலைமயிலான தெலுகு தேச கட்சியும் உள்ளன.

Source : Economic Times
Advertisement

அதிமுக இன்னமும் தனது வருமான தகவல்களை அளிக்கவில்லை என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. சர்ச்சைக்குரிய இஸ்லாமிய எம்.பி. அசாயுதின் ஓவைசி நடத்தும் கட்சி இன்னமும் தனது வருமான தகவல்களை தாக்கல் செய்யவில்லை. சென்ற ஆண்டு, அந்த கட்சி, ₹7 கோடி நன்கொடை பெற்றிருந்த நிலையில் அதில் வெறும் ₹5 லட்சம் மட்டுமே செலவழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share