செய்திகள்

சபரிமலை சன்னதி நடை இன்று திறப்பு : ஹிந்து வெறுப்பின் உச்சத்தில் பினராயி விஜயன் ?

சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 48 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் சன்னதி நடை திறக்கப்பட உள்ளது.

கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று (நவ.,16) மாலை சபரிமலை ஐயப்பன் சன்னதி திறக்கப்பட உள்ள நிலையில் சபரிமலை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கேரள கம்யூனிஸ்ட் அரசின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனை தொடர்ந்து கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “செப்.,28 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதன் மூலம், சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே விளக்கமாகும். தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. பக்தர்களின் உணர்வுகளை மாநில அரசு மதிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.”, என்று கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பாரத தேசத்தில் உள்ள கோடான கோடி ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு அனைத்து வயது பெண்களையும் அழைத்து செல்வதில் கேரள கம்யூனிஸ்ட் அரசு உறுதியாக இருப்பது நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.

Inputs from Dinathanthi and Dinamalar

Tags
Show More
Back to top button
Close
Close