செய்திகள்

“ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்” – கண்ணா லட்டு திண்ண ஆசையா பாணியில் ஸ்டாலினுக்கு துணை பிரதமர் கனவை காட்டும் நாயுடு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “பா.ஜ.கவுக்கு எதிரான அணியில் இணைய தி.மு.க-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் எங்களுடன் இணைவதாக தெரிவித்துள்ளார். மோடியை விட ஸ்டாலின் சிறந்தவர்” என்று தெரிவித்தார்.

இதற்கு கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் ‘ஒருவனை முதலில் ஏமாற்ற வேண்டும் என்றால் அவனின் ஆசையை தூண்ட வேண்டும்’ என்ற பழமொழியை ஸ்டாலின்- சந்திரபாபு நாயுடு புகைப்படத்துடன் இணைத்து பதிவிட்டுவருகின்றனர். குடியரசு தினத்துக்கும், சுதந்திர தினத்துக்கும் வித்தியாசம் தெரியாத அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத ஸ்டாலினை ஆந்திர முதல்வர் இவ்வாறு புகழ்ந்தது தமிழில் சொல்லப்படும் ‘வஞ்சபுகழ்ச்சி’ வகையில் சேரும்.

இந்த நிகழ்வை தொடர்ந்து பாலாறு பிரச்சினை குறித்து ஆந்திர முதல் மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்? என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை விடுத்துள்ளார். அதில், பாலாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பாலாறு விவகாரத்தை தமிழக அரசு சட்டரீதியாக அணுகி வந்ததால், ஆந்திர அரசு அணை கட்டும் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. பாலாறு பிரச்சினையில் தி.மு.க 2006 – 2011 வரையிலும், மத்தியில் 2004 முதல் 2013 வரை ஆட்சியில் இருந்த வரையிலும் என்ன நடவடிக்கை எடுத்தது? தி.மு.க நடவடிக்கை எடுத்திருந்தால் பாலாறு பிரச்சினை தொடர வாய்ப்பு இருந்திருக்காது.

சென்னையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த போது பாலாறு பிரச்சனைக்கு ஸ்டாலின் தீர்வு கண்டிருக்கலாமே? பாலாறு பிரச்சனை குறித்து பேச துரைமுருகனுக்கு எந்தவித தகுதியும் இல்லை. ஆந்திரா தடுப்பணை கட்டியபோது அமைச்சராக இருந்த துரைமுருகனுக்கு தெரியாதது விந்தையாக உள்ளது. மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்த அன்றே 21 தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்துள்ளது’ என்று கூறி திமுகவின் போலி அரசியல் முகத்திரையை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close