சிங்கப்பூரில் நடைபெறவுள்ள கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டின்போது, அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் இன்று தொடங்கவுள்ள கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாநாட்டுக்கு இடையே, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தோ பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க, அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் கடல் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்தியாவும் ஜப்பானும் காலம்காலமாக நல்லுறவுகளைப் பேணி வந்திருக்கின்றன. நூற்றாண்டுகளாக இந்தியாவும் ஜப்பானும் கலாச்சார பரிமாற்றங்களை பகிர்ந்துள்ளன. இந்தியாவின் கட்டமைப்புப் பணிகளுக்கு அதிகம் நிதியுதவி செய்யும் நாடுகளில் ஜப்பானும் முன்னிலையில் உள்ளது.

மேலும், இந்தோ – பசிபிக் கடல் எல்லை விவகாரத்தில் நான்கு நாடுகளும் இணைந்து, வெளிப்படையான முறையில் செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share