செய்திகள்

உலகை மிரள செய்யும் இந்தியாவின் விண்வெளி அறிவியல் நுட்பம்! இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விடுக்கும் சவால்!

இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, முன்னோட்டச் சோதனைகளின் பட்டியலை இஸ்ரோ தயாரித்து வருகிறது. 2 இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியா செயல்படுத்தும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை மிகவும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு கொண்டு செல்வதுடன், இளம் தலைமுறையினருக்கு உந்து சக்தியாகவும் அமையும். தேசிய திட்டமான இந்த ககன்யான் திட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அகாடமிக்கள் மற்றும் தொழில்துறையினர் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். இதன் மூலம் இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இணைவதுடன், தேசத்தின் பெருமையும் உயரும்.

10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இஸ்ரோ இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக மருத்துவ கருவிகள் முதல் நுண்ணியிரியல் சோதனைகள் வரை குறைந்தது 10 பிரிவுகளில் முன்னோட்ட சோதனைகளை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதே போல, பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில், நுண்பு வியீர்ப்பு சோதனைகளையும் இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. இதற்கான ஆலோசனைகளை அறிவியலாளர்கள் வழங்கலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்டில் இஸ்ரோ தலைவர் சிவன், ‘ககன்யான்’ விண்வெளி திட்டத்துக்கான 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக  கூறியிருந்தார். மேலும் வீரர்கள் இருக்கும் பகுதி, வீரர்கள் தப்புவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, உயிர்காக்கும் கருவிகள் மற்றும் விண்வெளி உடைகள் போன்ற தொழில்நுட்ப பணிகள் அனைத்தையும் ஏற்கனவே தயாரித்து விட்டதாகவும் அத்துடன் இந்த திட்டத்துக்கு பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டையும் வடிவமைத்து விட்டதாகவும், இதற்கான கட்டுப்பாட்டு மையம், ஏவுதளம் மாற்றி அமைப்பு, கருவிகள் இணைப்பு போன்ற சில கட்டமைப்பு பணிகள் மட்டுமே பாக்கி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், 2 ஆளில்லா விண்கலங்களை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் செலுத்தி சோதனை மேற்கொள்வோம் என கடந்த சுதந்திர தினத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close