ஊடக பொய்கள்

எந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்?

நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் அவர்கள் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதே… உங்கள் கருத்து?”, என்ற நிருபரின் கேள்விக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், “இந்த விஷயத்தை இப்போது தான் கேள்விப்படுகிறேன். இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போதுதான் நான் வருகிறேன்.” என்று பதிலளித்தார். முன்னதாக, கேள்வி கேட்ட நிருபர் மொட்டையாக “ஏழு பேர்” என்று கேட்டதை தெளிவு படுத்த, “எந்த ஏழு பேர்?”, என்று கேட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதை பிடித்துக்கொண்ட ஊடகங்கள், ரஜினிகாந்த் எந்த ஏழு பேர் என்று கேட்டு விட்டார் என்று கூக்குரல் இட துவங்கிவிட்டன.

ரஜினிகாந்தின் மீது அவதூறு பரப்பவே சிலர் அரசியல்வாதிகள் என்ற பெயரில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு, படமேதும் எடுக்காமல் இயக்குனர் என்ற போர்வையில் சுற்றித்திரியும் கௌதமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். தமிழினத்தை பற்றி அறியாதவர் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்னவென்றால், கடந்த ஆண்டு பேரறிவாளன் பரோலில் வந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசிய ரஜினி அவர் விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்று கூறியதாக பேரறிவாளனின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close