தொலைபேசி முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. தயாநிதிமாறன் மற்றும் 6 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதைத் தடை செய்யும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.  2013ஆம் ஆண்டில் திரு. கலாநிதி மாறன், அவரது சகோதரர் திரு. தயாநிதிமாறன் மற்றும் சிலர் மீது சிபிஐ குற்றப்  பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை திரு.தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, சுமார் 700 தொலைத்தொடர்பு இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இது தொடர்பாக புதிய குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

Source : AIR News

Share