சினிமாசெய்திகள்

சர்க்கார் பட சர்ச்சை முடிவடைந்த நிலையில் உருவெடுக்கிறது 2.0 சர்ச்சை

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிப்பில் ₹600 கோடி செலவில் தயாராகி உள்ள 2.0 படம் வருகிற 29-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பிற மொழி படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கோரி கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பிற மொழி படங்கள் கர்நாடகத்தில் வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கூறியதாக தினத்தந்தி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் 29ஆம் தேதி வெளிவருகிறது. இதற்காக கர்நாடகத்தில் அனைத்து திரையரங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறியதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

சர்க்கார் பட சர்ச்சை சற்றே முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளிவர உள்ள 2.0 படத்தின் சர்ச்சை ஆரம்பித்து விட்டது திரைத்துறை வட்டாரங்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Picture Courtesy : News 18 Tamilnadu

Tags
Show More
Back to top button
Close
Close