சமீபத்தில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்க்கார் திரைப்படம் வெளியானது. படம் அரசியல் களத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் அ தி  மு க கட்சியை குறிவைத்து அதிக விமர்சனங்கள் இடம் பெற்றிருந்தது.

Advertisement

முதலவரை “ஒன்னு” என்றும் துணை முதல்வரரை “ரெண்டு” என்று அழைப்பது EPS-OPS யை குறித்தது போல் இருந்தது. படத்தின் வில்லி பெயர் கோமளவல்லி , இது ஜெயலலிதாவின் இயற்பெயர். ஜெயலலிதா அளித்த மிக்ஸி , கிரைண்டர் ஆகிய இலவச பொருட்களை தீயில் எறிவது போல் கட்சி இருந்தது. இதை பார்த்த அ தி மு க தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். படத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் வெடித்தன. திரை அரங்கங்களில் வைக்கபட்டிருந்த விஜயின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று பட குழுவினர் உறுதியளித்தனர்.

இந்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த டி டி வி தினகரன் – விஜய்க்கு வீரம் இல்லை. இருந்திருந்தால் ஜெயலலிதா  இருக்கும் போதே எதிர்த்திருப்பார் என்றார்.

டி டி வி தினகரனின் கருத்தை பலர் வரவேற்கின்றனர். ஒருவர் உயிரோடு இருக்கும்பொழுது அவரை எதிர்க்காமல், அவர் இறந்த பிறகு அவரின் திட்டங்களை எதிர்ப்பதுதான் வீரமா ? அதுதான் ஹீரோக்கான அடையலாமா ?

Share