செய்திகள்

சென்னை ஐ.சி.எப்-இல் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள உலக தரம் வாய்ந்த அதி நவீன ரயில் பெட்டிகள் : மேக் இன் இந்தியாவின் சாதனை

சென்னை ஐ.சி.எப்-யில் தயாரிக்கப்பட்ட உலக தரம் வாய்ந்த நவீீீன வசதிகளுடன் கூடிய DEMU ரயில் வண்டி, இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளது. ஒவ்வொரு DEMU ரயில் வண்டியிலும் 12 பெட்டிகள் உள்ளன. இதில் முன்புறம் இரண்டு எகானமி வகுப்பு பெட்டிகளும், பின்புறம் இரண்டு எகானமி வகுப்பு பெட்டிகளும், இரண்டு குளிர்சாதன பெட்டிகளும், இரண்டு வர்த்தக ரக பெட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த ரயில் வண்டி, 1800 HP என்ஜினுடன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஏரோ டைனமிக்ஸ் முகப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பருவ நிலை மாற்றங்களை மனதில் வைத்துக்கொண்டு, கடலோரப் பகுதிகளில் பயணிக்கும் போது, ரயில் பெட்டிகளுக்கு அரிப்பு ஏற்படுவதை தடுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யப்படவுள்ள இந்த பெட்டிகள் உலக தரம் வாய்ந்தது என்று ஐ.சி.எப் தரப்பில் தெரிவிக்கிப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பும் வெளிப்புற தோற்றமும் சர்வதேச போட்டியாளர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் பெட்டிகளின் சிறப்பு அம்சங்கள் :

  • குளிர்சாதன வகுப்பு இருக்கைகள் சுழலும் இருக்கைகளாக இருக்கும். ரயில் செல்லும் திசைக்கு ஏற்றவாறு பயணிகள் இருக்கையை சுழற்றி கொள்ளலாம்.
  • பயண அனுபவம் நன்றாக இருப்பதற்கு, ரயில் முழுவதும் கண்ணாடி ஜன்னல்கள்.
  • வை-பை, ஜி.பி.எஸ் உடன் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போகிகள்.
  • ரயில் இருக்கும் இடம், செல்லும் வேகம், சேரவிருக்கும் நேரம் ஆகியவை துல்லியமாக ஜி.பி.எஸ் மூலம் கண்டறியப்பட்டு எல்.சி.டி ஸ்க்ரீன் மூலம் காட்சிப்படுத்தப்படும்
  • எலெக்ட்ரோ நுமேட்டிக் எனப்படும் தொழில் நுட்பம் கொண்ட அதி நவீன டிஸ்க் பிரேக்குகள்.
  • 360 டிகிரி சுழலக்கூடிய மின் விசிறி வசதி

Inputs & Picture Courtesy : Financial Express 

Tags
Show More
Back to top button
Close
Close