செய்திகள்

பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு சார்ஜ் ஏற்றும் மையம் : நாடு முழுவதும் செயல்படுத்த மோடி அரசு திட்டம்

இனி தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் இ வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை தொடங்க வகை செய்யும் வழிகாட்டுதல் முறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவக்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த தகுதியும் நிர்ணயிக்கவில்லை. இதனால் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவங்க உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அதே சமயம் நாட்டில் இயங்கும் எலக்ட்ரிக் வாகன சார்ஜ் ஏற்றும் மையங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மின்சார விநியோகம் செய்வதற்கான கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க உள்ளது.

ஒவ்வொரு 3 கி.மீ.,க்குள் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையத்தை அமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும், ஓலா, உபேர் போன்ற வாடகை கார் இயக்கும் நிறுவனங்களும் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்திற்கும், ஒன்று என்ற வகையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 18 சார்ஜ் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.  இந்த கட்டமைப்பை நிர்மானிக்க முடிவு செய்திருக்கும் கர்நாடக அரசின் ஆற்றல்துறை, இதற்கான அனுமதிகளை மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்திடம் கோரியிருக்கிறது. மேலும், பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், எலக்ட்ரானிக் சிட்டி முதல் அத்திப்பள்ளி வரையில், 6 எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் மையங்களை நிறுவ முடிவெடுத்துள்ளன.

மொத்தம் 107 இடங்களில் அமைய உள்ள எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் மையங்களில், பெங்களூரு பெருநகர எல்லைக்குட்ட சாலைகளில் 83ம், நெடுஞ்சாலைகளில் 24 சார்ஜ் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.இதற்கான இடங்களை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் உதவியோடு, இனங்கண்டு வருவதாகவும், கர்நாடக அரசின் ஆற்றல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Tags
Show More
Back to top button
Close
Close