சிறப்பு கட்டுரைகள்

இடதுசாரி தீவிரவாதத்தினை கடுமையாக பாதித்திருக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை!

நவம்பர் 08, 2016 அன்று மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உயர் மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகளான ₹500 மற்றும் ₹1000 மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். ஊழல், கறுப்பு பணம், நக்சல் இயக்கத்தை குறைத்தல், கள்ள நோட்டை ஒழித்தல், மற்றும் தீவிரவாதத்திற்கான நிதி ஆகியவைகளை உரு தெரியாமல் அழிப்பதே இதன் முக்கிய நோக்கம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் அறிக்கையின் மூலமாகவும், நக்சலுக்கு எதிரான அதன் செயல்பாடுகளின் தாக்கமும் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர் மற்றும் ரஜ்நந்த்கான் ஆகிய இடங்களில் உள்ள நக்சலால் பாதிக்கப்பட்ட 33 கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டது

நக்சல்வாதத்தின் மையப்பகுதியாக இருக்கும் காரணத்தால் அக்கிராமங்களின் முக்கிய இடங்களுக்கு சென்று அங்கிருக்கும் பொதுவான பழங்குடியினரிடம் பேசுவது மிக சவாலான காரியமாகவே இருந்தது. குறிப்பாக அவர்கள் நக்சல்களால் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் சமயத்தில் இந்த ஆய்வை மேற்கொள்வது மிக கடினமான ஒன்றாக இருந்தது. ஆனாலும் கூட அந்த சவாலை ஏற்றுக்கொண்டு 2300 கி.மீ தூரம் வரை பயணம் செய்தேன். அனைத்து தரப்பு மக்களையும், நக்சல் தலைவர்கள் உட்பட அனைவரையும் நேர்காணல் செய்தேன்.

எந்த நாட்டினராலும் எதிர்கொள்ளப்படும் மிக நீண்ட ஆயுதமேந்திய உட்புற மோதல்களே நக்சல் இயக்கம். 1996-ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை 15,000-க்கும் அதிகமான மக்கள் நக்சல் வன்முறையின் காரணமாக உயிர் இழந்துள்ளனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது. குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பாக அந்நடவடிக்கையின் தாக்கம் அவர்களின் நிதி வரவை மிக அதிகளவில் குறைத்து, அவர்கள் இயக்கத்தின் முதுகெலும்பை மிகவும் வலிமையாக தாக்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 2017-ஆம் ஆண்டில் நக்சல்களால் நிகழும் சம்பவங்கள் மிக கூர்மையாக 20% வரை குறைந்துள்ளது. அதே வேளையில் நக்சல்கள் கைது எண்ணிக்கை 55% உயர்ந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நக்சல்களை நேரடியாக எவ்வாறு தாக்கியுள்ளது என்பதை பார்க்கலாம்.

நக்சலுக்கான நிதி வரவு குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. நக்சலைட்கள் அவர்களுக்கு தேவையான மொத்த நிதியை வருடா வருடம் வசூலிக்கிறார்கள். அவர்களின் திட்ட அட்டவணைப்படி, வருடாந்திர தேவையை விடவும் மும்மடங்காக வசூலிக்கின்றனர்ஒரு ஆண்டிற்கான தேவை, ஒரு வருடத்திற்கான சேமிப்பு மற்றும் கூடுதல் ஆண்டிற்கான தேவை). சட்டிஸ்கர் மாநிலத்தில் மட்டும் அவர்களின் வருடாந்திர வசூல் ₹350 முதல் ₹400 கோடியை எட்டுகிறது. இச்சமயத்தில் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலமாக உயர்மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதால் அது நக்சல் இயக்கத்தின் நிதியை அடியோடு அசைத்து பார்த்தது, அவர்கள் சேமித்து வைத்திருந்த வருடாந்திர வசூல் பணம் மொத்தத்தையும் உபயோகமற்றதாக ஆக்கியிருக்கிறது.

நிதியில் ஏற்பட்ட நெருக்கடி அவர்களின் அடிப்படையான வளங்களுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இதன் மூலம், பாதுகாப்பு படையினரை பதுங்கியிருந்து தாக்கும் யுத்தியை நக்சல்களால் நடைமுறைப்படுத்த இயலவில்லை. இதன் மூலம் நக்சல்களால் நிகழும் சம்பவங்கள் 20% குறைந்துள்ளது.

நக்சலால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சட்டிஸ்கரில் தகவல் பற்றாகுறை மற்றும் உள்ளூர் உளவு ஆகியவை அப்பகுதியில் ஈடுபடுத்தபட்டிருக்கும் காவல் படையினருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. போதிய பண வளம் கையில் இருந்ததனால் உள்ளூர் துணையை முழுவதுமாக அனுபவித்து வந்தனர் நக்சல்கள். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பின்பாக நக்சலைட்டுகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி அங்கிருக்கும் பாதுகாப்பு படையினருக்கு அங்கிருக்கும் உள்ளூர்வாசிகளுடன் நெருங்கும் வாய்ப்பை சமூக நிகழ்வுகளின் மூலமும் சிறப்பு விழிப்புணர்வு முகாம்களின் மூலமும் வழங்கியுள்ளது. குறிப்பாக அடிப்படையான பொருட்களான உப்பு, மருந்து ஆகியவற்றை அதிகாரிகள் விநியோகித்ததன் மூலம். இது போன்ற நடவடிக்கைகள் காவல்துறையினருக்கு உள்ளூர்வாசிகளுடன் நெருங்கி பழங்கும் உறவை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் உள்ளூர்வாசிகளிடம் உளவு நோக்கும் பாங்கும் குறிப்பிடத்தகுந்தளவில் உயர்ந்துள்ளது.

கைதான நக்சல்கள் குறித்து பேசுகிற போது, 2015-ஆம் ஆண்டுடன் 2017-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது நக்சல்களின் கைது எண்ணிக்கையில் 55% அதிகரித்துள்ளது. அடிப்படை வளங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையின் காரணமாக நக்சலைட்டுகள் தங்களுக்கு செளகரியமாக இருந்த இடத்தை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் புதிதாக வளர்ந்துள்ள உள்ளூர் உளவு நோக்கும் பணி பாதுகாப்பு படைக்கும் மிகவும் உதவிகரமாக இயங்கி வனங்களை விட்டும் அவர்களின் முகாம்களை விட்டும் வெளியேறும் நக்சல்களை வலைவீசிப் பிடிக்க பேருதவியாக இருந்துள்ளனர்.

நகர்புற நக்சல்களின் முகத்திரையை கிழித்ததே மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. பல முன்னனி அமைப்புகள் மற்றும் நக்சல் அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ள மக்கள் ஆகியோர் இதன் பிரச்சாரத்தை முன்னெடுப்பத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்களின் இலக்கு ஒன்று தான் இந்தியாவுக்கு எதிரான ஆயுதமேந்திய புரட்சி படையை உருவாக்குவது அதன் மூலம் அப்பாவி குடிமக்களையும், பாதுகாப்பு படையினரையும் கொல்வது.

பல்கலைகழகம், தொலைகாட்சி நிலையங்கள் போன்ற இடங்களில் நகர்புற நக்சல்கள் தங்களின் நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இயங்கினர். இது போன்ற அமைப்புகளுள் ஒன்றான “கபீர் காலா மன்ச்” சமீபத்திய செய்திகளில் இடம் பிடித்தது மற்றும் அதனுடைய உறுப்பினர்கள் பலர் நக்சல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் கைது செய்யப்பட்டனர். இது போன்ற பல அமைப்புகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

நக்சலகளையும், தீவிரவாதத்தையும் எதிர்த்து போராடுவது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கமா என யாரேனும் கேள்வி எழுப்பியிருக்கிறார்களா?

ஆனால், இது போன்ற கொள்கைகளால் நிச்சயம் இப்படியான விளைவுகள் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கைகள் வெற்றிடத்தில் விளைவுகளை கொடுக்கும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பல்துறைகளின் மீது பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது அதில் ஒன்று தான் நக்சல்வாதத்தின் மீது ஏற்பட்டுள்ள தாக்கம்.

ஒரு இலக்கிய மதிப்பாய்வு திட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது இடதுசாரி முற்போக்குவாதிகள் என்னிடம் மிகவும் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர். என்னால் உண்மைக்கு ஏற்புடையதாக ஒரு ஆய்வு அறிக்கையையும் மற்றும் அனுபவரீதியான தரவுகளையும் கண்டெடுக்க முடியவில்லை. இதுவே நான் தனிபட்ட முறையில் ஆபத்து நிறைந்திருந்த போதும் பாதிக்கபட்ட கிராமத்தினுள் சென்று அறிக்கையை தயார் செய்வதற்கான காரணம்.

முன்னர் தெளிவான மற்றும் அர்பணிப்புணர்வுடன் அரசாங்கம் மிக வலிமையான சீர்திருத்தங்களை நக்சலின் அச்சுருத்தலுக்கு எதிராக மேற்கொண்டது. நக்சலால் பாதிக்கபட்ட அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு உதவி திட்டங்களை நிறுவுவதன் மூலமும் மற்றும் பணமதிப்பிழப்பு எனும் துணிவான நடவடிக்கையினாலும் மத்திய அரசு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் தலைமையில் நக்சலகளால் ஆயுதமேந்தும் புரட்சிப் படைகளுக்கு முடிவு கட்டியுள்ளது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் பெரும் பங்கு உண்டு.

This is a translated article written by Mani Bhushan Jha for OpIndia.Com

Tags
Show More
Back to top button
Close
Close