சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாளன்று ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உலகின் மிக உயரமான சிலையாக உருவெடுத்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை காண நாள் ஒன்றிற்கு 7,000 பேர் வருகை தருகின்றனர் என்று டி.என்.ஏ செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் ராஷ்டிரிய  ராஷ்டிரிய ஏக்தா ட்ரஸ்ட் (SVPRET) என்ற நிறுவனம் தான் சிலையை நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம் குஜராத் மாநில அரசின் கீழ் வருகிறது.

தற்போது நாள் ஒன்றிற்கு 15,000 பேர் வரை அனுமதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. சர்தார் படேல் சிலைக்கும் சர்தார் சரோவார் அணைக்கும் இடையே குளிர் சாதன பேருந்து வசதி துவங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வசதி மிக குறைந்த விலையில் பொது மக்களுக்கு வழங்க படுவதாகவும் SVPRET-யின் நிர்வாக இயக்குனர் கூறியதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி, 7,710 பேர் சர்தார் படேல் சிலையை காண முடிந்ததாகவும் அதன் மூலம் ₹19,10,450 வசூல் ஆனதாகவும் தேஷ் குஜராத் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில், வரும் நாட்களில் இந்த கூட்டம் இன்னமும் உயரக்கூடும் என்று தான் தெரிகிறது.

Share