செய்திகள்

விஜய் ரசிகர்களின் இல்லங்களிலும் இலவச பொருட்கள் உள்ளன : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு

சர்க்கார் படத்தின் சர்ச்சை ஓயாத சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அரசு வழங்கிய இலவச பொருட்கள் பற்றி விமர்சனம் செய்துள்ள சர்க்கார் படம், அ.தி.மு.க ஆட்சியில் அளிக்கப்பட்ட  இலவசங்களை மட்டும் விமர்சனம் செய்துள்ளது. தி.மு.க-வை விமர்சனம் செய்ய திராணியும் தெம்பும் இல்லாத சர்க்கார் படத்தில் வில்லியின் பெயர் கோமலவல்லி என்று வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் இயற்பெயர் கோமலவல்லி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அ.தி.மு.க மற்றும் அ.மு.மு.க தொண்டர்களிடையே இந்த படம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம். அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை. நடிகர் விஜய் ரசிகர்களின் இல்லங்களிலும் அரசின் விலையில்லா பொருட்கள் உள்ளது”, என்று கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close