1971 ஆம் ஆண்டில் வான்ச்சூ கமிட்டி  வெளிவராத பெருவாரியான வருவாய் மற்றும் அதிகரிக்கும் வரிச்சலுகை பிரச்சனையை கையாள்வதற்காக அமைக்கப்பட்டது. அதிக மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அழித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்த முதன் முதலில் பரிந்துரைத்தது இந்த குழு தான். ஆனாலும் கூட அந்த காலகட்டத்தில் இது குறித்து குறிப்பிடத்தகுந்த அளவில் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் 2016 இல் இந்தியாவின் வரி தளத்தை விரிவாக்குவதற்கு பெரும் தூண்டுதலாய் அமைந்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை.  இதனால் வரியினால் கிடைக்கும் வருவாய்  மட்டுமல்ல வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே அதிகரித்துள்ள வரி தளம் என்பது தற்போதைய நடப்பு அரசின் மாபெரும் வெற்றிகளுள் ஒன்று என்பது வெளிப்படையாக கிடைக்கும் உண்மை.

தி சென்ட்ரல் போர்ட் ஆப் டைரக்ட் டேக்ஸஸ் Central Board Of Direct Taxes சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அக்டோபர் 2018 இல் நிகழ்ந்த நேரடி வரி வசூல் தொடர்பானது. கடந்த இரண்டு – மூன்றாண்டுகளில் எவ்வாறு நேரடி வரியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது என்பது தான் இதில் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சமே.

Advertisement

அதிகரித்திருக்கும் வரி வருவாய் மற்றும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை
நேரடி வரி தொடர்பான பலதரப்பட்ட தளங்களில் குறிப்பிடும்படியாக நிகழ்ந்த வளர்ச்சிகள் பின்வருமாறு…

நேரடி வரியை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை – 80% அளவிற்கு உயர்ந்துள்ளது. நிதியாண்டு 2013 – 14 வரையில் 3.79 கோடியாக இருந்த எண்ணிக்கை நிதியாண்டு 2017-18 வரையில் 6.86 கோடியாக உயர்ந்துள்ளது.

தனிநபர் வருமானத்தை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை – கிட்டதட்ட இந்த காலகட்டத்தில் 65% வரை உயர்ந்துள்ளது. நிதியாண்டு 2013 – 14 வரையில் 3.31 கோடியாக இருந்தது நிதியாண்டு 2017-18 வரையில் 5.44 கோடியாக உயர்ந்துள்ளது.
வரி செல்லுத்துவோரின் எண்ணிக்கை – இது கிட்டதட்ட 40% வரை அதிகரித்துள்ளது. நிதியாண்டு 2013 – 14 வரையில் 5.27 கோடியாக இருந்த எண்ணிக்கை நிதியாண்டு 2017-18 வரையில் 7.41 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த மாற்றத்திற்கான அடிப்படை காரணம் பணமதிப்பிழப்பு என்னும் உந்துதல் தான். கணக்கில் வராத வருவாயை வெளிப்படையாக அறிவிக்க வைத்தது, அதுமட்டுமின்றி முறையாக தொழிலை பதிந்து வருவாயை வெளிப்படையாக அறிவிக்க செய்யும் கட்டாயத்திற்கு ஆளாக்கியது இந்த நடவடிக்கை தான்.

நேரடி வரிகளின் மொத்த வசூல் – நேரடி வரி வசூல் மொத்த மதிப்பில் குறிப்பிடத்தகுந்த உயர்வை எட்டியுள்ளது. நிதியாண்டு 2016 இல் நேரடி வரிகளின் மொத்த மதிப்பு 7.4 இலட்சம் கோடி . இது நிதியாண்டு 2017 இல், அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின் 8.4 கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்த நிதியாண்டான 2018 இல் இதன் மதிப்பு 10 இலட்சமாக மென்மேலும் உயர்ந்துள்ளது. எனவே இதன் மூலம், நிதியாண்டு 2017 மற்றும் நிதியாண்டு2018 இல் முறையே 14% மற்றும் 18% அளவில் ஆரோக்யமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இதுபோன்றதொரு வளர்ச்சியை நேரடி வரிகள் இதற்கு முன் கண்டதில்லை. ஆனாலும் கூட இதன் உண்மை முகத்தை இதன் தனிப்பிரிவுகளான வருமான வரி போன்றவற்றில் காணமுடிகிறது.

வருமான வரி மற்றும் இதர நேரடி வரி வசூல்

வருமான வரி பிரிவின் கீழ் கணக்கில் வராத பெருவாரியான தொகை மீட்கப்பட்டுள்ளது. வரி வசூலின் மதிப்பு நிதியாண்டு 2016 இல் 2.8 இலட்சம் கோடியாக இருந்தது. அதுவே அடுத்த நிதியாண்டான 2017 இல் 3.4 இலட்சம் கோடியாக உயர்ந்து ஒரே ஆண்டில் 21% வளர்ச்சியடைந்து பெரும் பாய்ச்சல் கண்டது. இது ஒரு அளப்பறிய சாதனை ஏனெனில் அதை தொடர்ந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் வளர்ச்சிக்கு ஆண்டுக்கு 8% உயர்வு கண்டுள்ளது. இந்த குறிப்பிடத்தகுந்த சாதனைபாய்ச்சல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நிகழ்ந்த நேர்மறை தாக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

வருமான வரி பிரிவின் கீழ் கணக்கில் வராத பெருவாரியான தொகை

மீட்கப்பட்டுள்ளது. வரி வசூலின் மதிப்பு நிதியாண்டு2016 இல் 2.8 இலட்சம் கோடியாக இருந்தது . அதுவே அடுத்த நிதியாண்டான 2017 இல் 3.4 இலட்சம் கோடியாக உயர்ந்து ஒரே ஆண்டில் 21% வளர்ச்சியடைந்து பெரும் பாய்ச்சல் கண்டது. இது ஒரு அளப்பறிய சாதனை ஏனெனில் அதை தொடர்ந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் வளர்ச்சிக்கு ஆண்டுக்கு 8% உயர்வு கண்டுள்ளது. இந்த குறிப்பிடத்தகுந்த சாதனைபாய்ச்சல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நிகழ்ந்த நேர்மறை தாக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இரண்டு வழிகள் உண்டு. தூண்டுதலாக இருப்பது மற்றொன்று அழுத்தத்தை உருவாக்குவது.  பொருளாதாரத்தில் தனிநபர்களிமிருந்து தேவையான பண்பை பெறுவதற்கு சில அதிர்ச்சி வைத்தியங்களும் தேவையானதாகவே இருக்கிறது. பணமதிப்பிழப்பு அவ்வகைகளுள் ஒன்றாக திகழ்ந்து வரி தொடர்பான பிரச்சனை தீர்க்கப்பட்டதில் பிரதிப்பலிக்கிறது. இதனோடு சேர்ந்து மற்ற இரு நடவடிக்கைகளான ஜிஎஸ்டி எனும் வரி சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இவைகளின் மூலம் நிகழ்ந்துள்ள நகர்வு தொழில் செய்யும் முறையை மிக எளிமையானதாகக ஆக்கியுள்ளது. அதிகரித்துள்ள வரி மதிப்பின் மூலமாய், அதிக வளங்கள்  கிடைத்துள்ளன. இவை  உபயோகமான துறைகளான சாலை, இரயில்வே, துறைமுகம், சுகாதாரம், கல்வி, மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவைகளில் பயன்படுத்தப்படுவதை இது உறுதிப்படுத்தும்.

நீதிபதி வான்ச்சூ அவருடைய அறிக்கை செயல்வடிவம் பெற்றிருப்பதை காண இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் மோடி அரசு அவருடைய பரிந்துரைகள் சரியான வகையில் செயல்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

Translated from Rightlog.in article titled “Demonetization impact: Phenomenal increase in tax base”

Share