ராணுவப் படைகளின் வருவாய் தொடர்பான கொள்முதல் சார்ந்த முடிவுகளை விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து மடங்காக உயர்த்தியது. இந்த புதிய அதிகாரம் வழங்கப்பட்டதின் மூலம், ரூ.500 கோடி வரை செலவு செய்வதற்கான அதிகாரம் துணைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ராணுவப்படைகளின் திறனை மேம்படுத்த உதவும்.

ராணுவப்படைகளின் தயார் நிலையை மேம்படுத்தும் வகையில்  ஆயுதம் மற்றும் படைக் கலன்களை வலுப்படுத்தும் விதத்தில் இந்த முக்கிய முடிவை மத்திய பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் எடுத்துள்ளார்.

Source : PIB

Share