நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள மாரி2 படத்தின் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சாய் பல்லவி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். அராத்து ஆனந்தி என்ற பெயருடன் ஆட்டோ டிரைவர் உடையில் மாசாக காட்சி அளிக்கிறார் சாய் பல்லவி.

போஸ்டர் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் சுற்றி வர ஆரம்பித்து விட்டது இந்த போஸ்டர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாய் பல்லவியின் அராத்து ஆனந்தி கதாபாத்திரம் மாரி2 படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 

Share