ராஜ ராஜ சோழனின் வரலாற்று சிறப்பை பற்றி உத்தரகாண்ட் பா.ஜ.க- வை சேர்ந்த முன்னாள் எம்.பி. தருண் விஜய்,  இந்திய வானொலியில் ஹிந்தி மொழியில் தொகுத்து வழங்க உள்ளார்.

பா.ஜ.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருவள்ளுவருக்கான மாணவர் மற்றும் இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான தருண் விஜய் அவர்கள், ஒரு தீவிர தமிழ் பற்றாளர்.

பிரதமர் மோடியின் தமிழ் பற்றால் ஈர்க்கப்பட்டு, ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் பற்றிய சரத்திரத்தை வட இந்தியா முழுவதும் பரவ செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளார். அந்த வகையில் வரலாற்றிலேயே முதல் முறையாக, நாளை, (நவம்பர் 9) இரவு 9.30 மணிக்கு, இந்திய வானொலி மையம், இந்திரப்ரஸ்தா அலைவரிசையில் ராஜ ராஜ சோழன் பற்றிய வரலாற்றை ஹிந்தி மொழியில் தொகுத்து வழங்க உள்ளார்.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், ராஜேந்திர சோழன் பற்றிய வரலாற்றை இந்திய வானொலி மையம் மூலம் வட இந்தியாவிற்கு எடுத்து சென்றார்.

சோழர்களின் வீர வரலாற்றை பற்றி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வதில் தமிழகத்தின் திராவிட அரசியல் வாதிகள் எந்த முயற்சியும் எடுக்காத நிலையில்,உத்தரகாண்டை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், வட இந்தியா முழுவதும் சோழர் வரலாற்றை எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டுவது தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Share