ஆஃப்கானிஸ்தானில் கிழக்கு கஜினி பிராந்தியத்தில் தாலிபான் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 13 ஆஃப்கான் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். கஜினி பிராந்தியத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ராணுவ, போலீஸ் கூட்டு சோதனைச் சாவடியை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, கஜினி பிராந்திய ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் 7 ராணுவ மற்றும் 6 போலீஸ் படையினர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். மூன்று மணி நேரம் தொடர்ந்த இத்தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததாகவும், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, கஜினி பிராந்தியத்தில் மட்டும் நாட்டின் அக்டோபர் மாதத் தேர்தல்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வாக்கெடுப்பு ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Source : AIR News

Share