வாரணாசியில் ஆயிரத்து 572 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளை பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் கங்கை நதியில் நான்கு கரைகளை இணைக்கும் படகு போக்குவரத்து முனையங்கள் அமைக்கும் திட்டத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

வாரணாசி ரிங் ரோடு திட்டம் மற்றும் பாபட்புட் விமான நிலையத்தை இணைக்கும்-வாரணாசி சாலை திட்டம் ஆகியவை நிறைவு பெற்றுள்ளன. கடந்த ஆண்டு வாரணாசியில் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர், இரண்டு நாள் வாரணாசி சுற்றுப்பயணத்தின்போது பாபத்பூர் – ஷிவபூர் சாலை விரிவாக்கம், ரிங் ரோடு-2 மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சில திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை  தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் மோடியுடன் ஆளுநர் ராம் நாயக் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

Share