தீபாவளியை பண்டிகையை ஒட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை, 4 நாட்களில், ₹602 கோடியாக உயர்ந்ததுள்ளது என்று தந்தி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. கடந்த சனிக்கிழமை ₹124 கோடிக்கும்,  ஞாயிற்றுக்கிழமை ₹150 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆயின என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

தீபாவளி நாளில் மட்டும் ₹180 கோடிக்கு, மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தாண்டு தீபாவளிக்கு, ₹320 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதுப்பிரியர்களின் உற்சாகத்தால், இப்போது, இலக்கை மிஞ்சி, தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை ஆகி உள்ளது.

மூதறிஞர் ராஜாஜி ஆண்ட போது, மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி சாதனை படைத்தார். பிறகு, திமுக ஆட்சியில், கலைஞர் கருணாநிதி தலைமையில் மீண்டும் மது விற்பனை துவங்கப்பட்டது. பிறகு, டாஸ்மாக் உருவானது. திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்யும் தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு தமிழகமே மது விற்பனையில் மூழ்கி விட்டது.

Picture Courtesy : The Hindu

Share