தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை, தீபாவளி திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் தீப உற்சவம் நடைபெற்றது.

இறுதி நாளான நேற்று இரவு அயோத்தியா நகரில் சரயு நதிக்கரையில் 3,01,152 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது.

 

உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அம்மாநில கவர்னர், துணை முதல் மந்திரி உள்ளிட்ட இதர மந்திரிகள் மற்றும் இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த தீப உற்சவத்தில் பங்கு கொண்டனர்.

இந் நிலையில், இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகவும் மாறியுள்ளது. இதை காண வந்திருந்த உலக சாதனை புத்தகமான கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழை உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்திடம் வழங்கினர்.

முன்னதாக அயோத்தியா நகரில், தசரதர் பெயரில் புதிய மருத்துவமனை மற்றும் பகவான் ராமபிரான் பெயரில் புதிய விமான நிலையம் ஆகியவை திறக்கப்படும் என்று இவ்விழாவில் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

Share