அகமதாபாத் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குஜராத் மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகமதாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகும்.

அகமதாபாத் நகரின் பெயரைக் கர்ணாவதி என மாற்றுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகக் குஜராத் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல் தெரிவித்துள்ளார். காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அகமதாபாத்தின் பெயரைக் கர்ணாவதி என மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாக உள்ளதாகவும், இதற்கு மக்கள் ஆதரவு இருந்தால் சட்டப்படியான நடைமுறைகளை முடித்துப் பெயரை மாற்ற அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச அரசு அலகாபாத்தைப் பிரயாக்ராஜ் என மாற்றியதும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டம் என மாற்றியதும் குறிப்பிடத் தக்கது. அதையடுத்துக் குஜராத் அரசும் பெயர் மாற்றம் பற்றிப் பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது

Share