சிறப்பு கட்டுரைகள்

சர்தார் படேல் சிலை குறித்து உண்மைக்கு புறம்பாக பேசிய இங்கிலாந்து எம்.பி-யும், தவறாக செய்தி வெளியிட்ட இங்கிலாந்து ஊடகமும்

ஒருங்கிணைந்த இந்தியா கட்டமைய காரணமாக இருந்த சர்தார் வல்லபாய் படேலை சிறப்பிக்கும் பொருட்டு உலகிலயே மிகப்பெரிய அவரின் திருவுருவ சிலையை நிர்மாணிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். குஜராத் மாநில முதல்வராக 10 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் 2010-லேயே படேல் சிலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் மோடி. பின்னர் 2013-ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் படேலுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைத் தந்தார். அப்போதே சிலைக்கான அடிக்கல்லையும் நாட்டினார். இந்தியாவின் மிக பெரிய சுற்றுலா தலமாக மாறி, நாட்டுக்கு பெரும் வருமானம் ஈடவிருக்கும் இந்த சிலை நிறுவுவதற்கு பெரும்பாலான நிதியை குஜராத் அரசாங்கம் ஒதுங்கியது. இதோடு நின்றுவிடாமல் இந்த சிலைக்காக நாடு முழுவதுமிலிருந்து இரும்பு சேகரிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார் மோடி. மோடி பிரதமர் ஆன பின்னர் 2017-ல் பல்கலைக்கழக மானிய கமிஷனிடமிருந்து ஓர் உத்தரவு வருகிறது. உயர் கல்வி நிறுவனங்கள் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ல் ஒற்றுமை ஓட்டம் நடத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இந்த ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அன்றிலிருந்து படேல் சிலை நிர்மாணிக்கும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு பிறகு திறப்பு விழாவை கண்டுள்ளது.

சர்தார் படேலின் 143வது  பிறந்த தினமான அக்டோபர் 31 அன்று இதைத் திறக்க வேண்டும் என்ற முனைப்புடன் பிரதமர் மோடி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் விளைவாக அன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமைந்தது. மைக்கேல் க்ரேவ்ஸ் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன் என்ற நிறுவனம் இதன் வடிவமைப்பு மற்றும் நிர்மாணிப்பை மேற்பார்வையிட்டு வருகிறது.

ராம் வி.சுதார் என்பவர் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். இச்சிலை வரலாறு காணும் மிகப் பெரிய கலைப் பொக்கிஷம் என புகழப்படுகிறது. குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தீல் சர்தார் சரோவர் அணை அருகே சாது பெட் என்ற பெரிய தீவில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைக்கும் நிபுணர்களில் ஒருவரான ஜேம்ஸ் விஸ்னியூஸ்கி (James Wisneewski) ‘இந்தச் சிலை முடிந்த பின்னர் இதைப் பார்க்கும் அனைவரும் பிரமித்துப் போவர். இந்தச் சிலை தண்ணீரில் நடப்பது போல இருக்கும்’ என்று சிலை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கும் பொழுதே ஆரூடம் கூறினார். இந்தத் தீவில் மியூஸியம், தோட்டம்,  ஹோட்டல், வருவோரை வரவேற்க வரவேற்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இடம் பெறுகிறது. இவ்வளவு சிறப்புகளும் இந்தியாவிற்கு கிடைத்துள்ள நிலையில், இதன் நற்பெயரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அந்நிய சக்திகள் இறங்கி விட்டதாகவே தெரிகிறது.

டெய்லி மெயில் யு.கே என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாளிதழ், “330 பில்லியன் பவுண்ட் செலவாகியுள்ள நிலையில், இங்கிலாந்து 1 பில்லியன் பவுண்ட் கொடுத்துள்ளோம்”, என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தியின் தலைப்பு தவறாக வழி நடத்துவதாகவும், செய்தியின் உண்மை தன்மை கேள்விக்குள்ளாக்க பட வேண்டியதாகவும் தான் இருக்கிறது. உண்மை யாதெனில், சர்தார் படேல் சிலை நிறுவப்படுவதற்கு இங்கிலாந்தின் 1 பவுண்ட் கூட செலவிடப்படவில்லை. இந்த செய்தியை டெய்லி மெயில் யு.கே வெளியிட்ட உடனேயே பல தேசியவாதிகளும் ட்விட்டரில் இந்த செய்திக்கு கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழக பா.ஜ.க இளைஞர் அணி துணை தலைவர் திரு.எஸ்.ஜி. சூர்யா அவர்கள் இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ஒரு காலத்தில் எங்களை ஆண்ட பிரிட்டீஷர்கள் தற்போது ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டனர். இந்தியா உலகளவில் பெரிய சக்தியாக உருவாகி வருவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இங்கிலாந்து அளித்த நிதியிலிருந்து 1 பவுண்ட் கூட இந்த சிலைக்காக செலவிடப்படவில்லை. ஆனால், டெய்லி மெயில் பத்திரிகையின் வஞ்சகமான தலைப்பை பாருங்கள், இதையும் சில பத்திரிக்கையாளர்கள் ஆமோதிக்கின்றனர்”, என்று பதிவிட்டார்.

தொடர்ந்து பதிவிட்ட அவர், இங்கிலாந்து எம்.பி. பீட்டர் போன் அவர்களை கடுமையாக சாடினார். “‘எங்கள் நிதியிலிருந்து 1.1 பில்லியன் பவுண்டடுகளை எடுத்துக் கொண்டு, 335 பில்லியன் பவுண்ட் செலவில் சிலையை கட்டுவது அர்த்தமற்றது’ என்ற உங்கள் கூற்று ஒரு கேலிக்கூத்து. அர்த்தமற்றது எது என்று நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அளிக்கும் நிதியை நிறுத்த சொல்லி இந்தியா எப்போதோ தெரிவித்துவிட்டது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்”, என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு வருடமும், 15,000 மாணவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படிக்க செல்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில், இந்திய மாணவர்கள் 1.5 பில்லியன் பவுண்ட்களை தங்கள் படிப்பிற்காகவும் மற்ற செலவுகளுக்கும் செலவழித்துள்ளனர். எப்படியாயினும் நீங்கள் அளித்த நிதியை வட்டியுடன் திரும்ப பெருகிறீர்கள். அது மட்டுமல்லாமல் உங்கள் பேராசிரியர்களுக்கு சம்பளமும் கிடைக்கிறது. எனவே அழுவதை நிறுத்துங்கள்”, என்று கடுமையாக சாடினார்.

“அது மட்டுமில்லாமல் இந்தியாவிடம் இருந்து நீங்கள் 240 முதல் 300 டிரில்லியன் பவுண்ட் மதிப்பிலான சொத்துக்களை கொள்ளையடித்து உள்ளீர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நீங்கள் இந்தியாவிடம் இருந்து விலை மதிப்பில்லாத வைர வைடூரிய நகைகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்து ஆயிரம் டிரில்லியன் பவுண்ட்களையும் தாண்டும். அவைகளில் ஒன்று தான் கொஹினூர் மாணிக்கம். புரிகிறதா உங்களுக்கு”, என்று சாடியுள்ளார்.

மேலும் கூறுகையில், “2012 ஆம் ஆண்டே உங்களுடைய நிதி உதவி எங்களுக்கு தேவை இல்லை என்று இந்தியா தெரிவித்துவிட்டது. ஆனால், இங்கிலாந்து நாட்டின் நிதியை நிறுத்தினால் அரசியல் சங்கடம் ஏற்படும் என்று நீங்கள் கேட்டுக்கொண்டதால் நீங்கள் நிதி உதவி அளித்து வருகிறீர்கள்”, என்று பதிவிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு, முன்னாள் குடியரசு தலைவர் மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் நிதி அமைச்சராக இருந்த போதே, இந்தியாவிற்கு இங்கிலாந்தின் நிதி உதவி தேவையில்லை, நிறுத்திவிடுங்கள் என்று கூறியுள்ளார் என டெலிகிராப் என்ற இங்கிலாந்து செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. மேலும் இங்கிலாந்து அளிக்கும் நிதி, நிலக்கடலை போன்றது எனவும் கடும் விமரசனர்த்தை முன் வைத்தார் என அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவை ஆண்டு இங்கிருந்த செல்வங்களை எல்லாம் சூறையாடிவிட்டு இப்போதும், இந்தியா உலகத்தில் பெரும் சக்தியாக வளர்ந்து வரும் இன்றைய நிலையிலும், இங்கிலாந்து நாட்டில் இந்தியர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. கடந்த அக்டோபர் மாதம், நவராத்திரியின் போது, இங்கிலாந்தில் உள்ள இந்தியர்களுக்கு ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அப்போது, நவராத்திரி பண்டிகையின் போது, இந்தியர்கள் தங்கள் நகைகளை பத்திரமாக பாதுகாத்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். தென் கிழக்கு லண்டனில் மூத்த இந்திய தம்பதிகளின் நகைகள் சூறையாபடப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்தது. இங்கிலாந்து நாட்டின் நிலைமை இப்படி இருக்க, இங்கிலாந்து அளித்த நிதியில் சர்தார் படேல் சிலை கட்டப்பட்டிருக்கிறது என்று இங்கிலாந்து எம்.பி ஒருவர் கூறியதும், அதை தொடர்ந்து, மக்களை தவறாக திசை திருப்ப முயலும் இங்கிலாந்து ஊடகங்களின் செயல்களை பார்க்கும் போது, இந்தியாவின் அதீத வளர்ச்சியை கண்டு இங்கிலாந்து பயந்து விட்டதோ என்ற கேள்வி தான் எழுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close