தீபாவளி சிறப்பு திரைப்படமாக, வெளிவந்து 5 வாரங்களே ஆகும் சூப்பர் ஹிட் திரைப்படம் 96-ஐ திரியிடுகிறது சன் டி.வி.

ஆசியாவிலேயே மிக பெரிய சாட்டிலைட் தொலைக்காட்சி நெட்வொர்க்காக கடந்த திமுக-காங்கிரஸ் ஆட்சியின் போது சன் டி.வி வளர்ச்சி பெற்றது அனைவரும் அறிந்ததே. தற்போது, திரைத்துறையிலும் உள்ளே புகுந்து பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறது. இதனால் தனது ஆதிக்கத்தை திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது சன் நெட்வொர்க். அந்த வகையில், மிக பெரிய ஹிட்டான படமான 96 படத்தை வெளிவந்து 5 வாரங்களுக்குளாகவே சன் டி.வி வெளியிடுவது பலரின் மனதையும் புண்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள 96 படத்தின் நாயகி த்ரிஷா, “படம் வெளியிடப்பட்டு 5 வாரங்களே ஆகின்றன. இன்னமும் திரையரங்குகளில் 80% கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில், படம் தொலைக்காட்சியில் திரையிடுவது சரியில்லை என்று படக்குழு கருதுகிறது. எனவே 96 படம் திரையிடப்படுவதை பொங்கல் விடுமுறைக்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்று பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து, தனது அரசியல் ஆதிக்கத்தையும், பண ஆதிக்கத்தையும் சன் குழுமம் தவறாக பயன்படுத்துகிறதா என்ற கேள்வி வலுத்து வருகிறது. முன்னதாக சர்க்கார் பட கதை திருட்டு வழக்கில் கார்ப்பரேட் கிரிமினல்களின் சூழ்ச்சியால் எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. சர்க்கார் படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ் என்ற அரசியல் ஆதிக்கம் மிகுந்த கார்ப்பரேட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share