சிறப்பு கட்டுரைகள்

ஆசிய நாடுகளிலேயே முதலீடுகளில் முந்தும் இந்தியா, தமிழகத்தில் மட்டும் 3.34 லட்சம் முதலீட்டார்கள் சேர்ந்துள்ளனர் !

ஆசிய பொருளாதாரத்தில் முதலீடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் நாடு இந்தியா. இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் சேமிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்கள். சேமிப்பை மீண்டும் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயை ஆடம்பரமாக செலவு செய்யாமல், அதிலிருந்து மீண்டும் வருவாய் ஈட்ட விருப்பம் கொண்டவர்கள். ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை சுற்றியுள்ள 11,000 பணம் படைத்த வசதியான மக்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது ஸ்டார்ன்டட் சார்டட் வங்கி மற்றும் பிரிட்டிஷ் பன்னாட்டு வங்கி.

அதில் 68% வசதியான இந்தியர்கள் தங்களின் வருங்கால பொருளாதார இலக்கை அடைய முதலீடுகளையே ஓர் கருவியாக பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. நிலையான வருவாய் முதலீடுகள், பங்குகள், மியுட்சுவல் பண்டஸ், யுனிட் ட்ரஸ்ட்ஸ், முதலீடுகளுடன் இணைக்கப்பட்ட காப்பீடுகள், சுய முதலீடு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதிகள், ரியல் எஸ்டேட் சொத்து முதலீடுகள் ஆகியவை முதலீட்டும் வகைகளாக அந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான இந்திய மக்களின் சேமிப்புக்கு பின்னிருக்கும் முக்கிய அடிப்படை காரணம் தங்கள் குழந்தைகளின் வருங்கால படிப்புச்செலவே.  குழந்தைகளின் மேற்படிப்பு செலவுகளை மேற்கொள்வதே சேமிப்பின் அதி முக்கிய காரணமாக இந்தியாவில் திகழ்கிறது என அவ்வாய்வு தெரிவிக்கிறது.

பொருளாதாரத்தில் வெற்றிகண்டு துளிர்த்தெழுவோரின் மத்தியில் இன்று பெருகியிருக்கும் சமூக இயக்கதை காண மிக உற்சாகமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் அவர்களின் பெற்றோர் பெற்றிருந்த கல்வி சார்ந்த வெற்றியை, அவர்கள் தொழில் சார்ந்த சாதனைகளை மற்றும் இல்லத்தின் தலைமையை என அனைத்தையும் கடந்து முன்னோக்கி போவதை காண மிக உவப்பாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் ஸ்டார்ன்டட் சார்டட் வங்கியின் இந்திய பிரிவின் ரீடைல் பிரிவின் தலைவர் சியாமல் சாக்ஸீனா. அரும்பு நிலையிலிருக்கும் வெற்றிகரமான இளைஞர்கள் அவர்களின் இலக்குகளை அடைய டிஜிட்டல் பொருளாதார சேவைகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. மற்றும் இந்த கருவிகள் மூலம் அவர்களின் தனிப்பட்ட பொருளாதார வாழ்வின் வெற்றி வேறொரு தளத்தை அடைய உதவிவருகின்றன. எனவும் சாக்ஸீனா தெரிவித்தார்.

வெற்றிகரமான முதலீட்டார்கள் பெரும்பாலும் தங்களின் முதலீட்டுக்கான களமாக பயன்படுத்துவது மியுட்சுவல் பண்ட் திட்டத்தை (31%). நிலையான வருவாய் முதலீட்டை பயன்படுத்துபவர்கள் 25%. பங்கு முதலீட்டில் முதலீடு செய்பவர்கள் 22%.  குறைந்தபட்ச கல்வியறைவை கொண்ட முதலீட்டாளர்கள் பெரும்பாலும் நிலையான வருவாய் முதலீட்டையே விரும்புகின்றனர். இன்றைய காலகட்டத்தில் மியுட்சுவல் பண்ட் திட்டம் எளிமையான அணுகுதல் வசதியின் மூலம் அதீத கவனத்தை பெற்று வருகிறது. கல்வியில் சிறந்தோர் பங்கு முதலீடு மற்றும் மியுட்சுவல் பண்ட் இரண்டையும் தேர்வு செய்கின்றனர்.

நம் நாட்டில் நிலவும் சேமிப்பு பழக்கத்தின் காரணமாக நம் இந்திய பொருளாதாரம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பெருமளவில் செலவு செய்யும் மேற்கத்திய நாட்டினரை போலல்லாமல் இந்தியர்கள் சேமிப்புக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருக்கிறார். சமீப காலத்தீல் ரீட்டைல் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்தியாவின் முக்கிய இரண்டு பங்கு சந்தைகளுள் ஒன்றான மும்பை பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 14.22 % வளர்ச்சியடைந்துள்ளது. மும்பை பங்கு சந்தையிலிருந்து கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் முதலீட்டாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களின் (நேரடி பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் மியுட்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் மும்பை பங்கு சந்தை தளத்தை பயன்படுத்துவது) எண்ணிக்கை ஆகஸ்ட் 24, வரையில் 4.01 கோடியாக உள்ளது. கடந்தாண்டு 49, 95,854 பேர் புதிதாக சேர்ந்த முதலீட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வளர்ச்சியின் மூலமாக சென்சஸ் கடந்தாண்டில் 21.2 சதவீதமாக பாய்சல் கண்டது. இது போன்றதொரு சென்சஸ் உயர்வை அதுவும் உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து ஏற்படும் நிகழ்வை இந்தியாவில் இதற்கு முன் கண்டதில்லை. ரீட்டைல் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை மஹாராஸ்ட்ராவில் உச்சத்தை அடைந்திருக்கிறது. இம்மாநிலம் மொத்தம் 10 இலட்சம் வாடிக்கையாளர்களையும் (13%) அதன் அருகாமை மாநிலமான குஜராத் 8 இலட்சம் முதலீட்டாளர்களையும் சேர்த்துள்ளது.

கடந்த காலங்களில் உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் பாரம்பரியமாக முதலீட்டாளர்கள் எண்ணிக்கையில் பின் தங்கியிருந்தன. ஆனால் அம்மாநிலங்கள் கூட இன்று வளர்ச்சி கண்டிருப்பது கவனிக்கத்தக்கது. இம்மாநிலைத்தை சார்ந்தவர்களும் பங்குசந்தையில் கால்பதிக்கத் துவங்கியுள்ளனர். உத்திரபிரதேசத்தில் 3.4 இலட்சம் முதலீட்டாளர்களும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் முறையே 3.34 மற்றும் 3.01 இலட்சம் முதலீட்டார்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேசிய தலைநகரான டெல்லி 2.64 இலட்சம் முதலீட்டாளர்களை இணைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் புதிய முதலீட்டாளர்க்களை சேர்க்கும் வளர்ச்சி விகிதத்தில் 21.8சதவீதம் கூடியுள்ளது. பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்கள் முறையே 19.7% மற்றும் 16.1% வளர்ச்சிகண்டுள்ளன. முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் முதலீட்டாளர்கள் சந்தித்து வந்த தொழில்நுட்ப ரீதியான சவால்கள் குறைந்துள்ளது. இதன் மூலம் பங்குசந்தையில் பணத்தை முதலீடு செய்யும் வழி மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

மியுட்சுவல் பண்ட் திட்டம மூலமாக  பங்கு சந்தை முதலீட்டை பொது மக்கள் அணுகவது எளிமையாக்கப்பட்டுள்ளட்து. மற்றும் குறு சேமிப்பு செய்பவர்களுக்கு ஏதுவாக ஜனநாயகமயமாக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் இந்திய பங்கு சந்தையிலிருந்து பெறப்படும் வருவாய் குறிப்பிடத்தகுந்தளவு உயர்ந்துள்ளது. மேலும் இதுவே நேர்மறை முதலீட்டாளர் என்ற உணர்வை பெறுவதற்கான காரணங்களுல் ஒன்றெனலாம்.

Input Credits : Rightlog

Tags
Show More
Back to top button
Close
Close