ரோம் திரைப்பட விழாவின் வீடியோசிட்டே 2018ல் இந்திய அரங்கு தொடங்கப்பட்டுள்ளது.  விர்சுவல் ரியாலிட்டி, வீடியோ கேமிங், அனிமேஷன், திரைப்பட உருவாக்குதல் ஆகியவற்றை மையமாக கொண்ட நிகழ்ச்சிதான் இந்த வீடியோசிட்டே.

இந்த திரைப்பட விழாவில் இந்திய பிரமுகர்கள் குழு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை செயலர் திரு. அசோக் குமார் பர்மர் தலைமையில் பங்கேற்றது. நமது நாட்டு திரைப்படங்களில் உள்ள பன்முகத்தன்மையை எடுத்துரைப்பதும் மற்ற நாடுகளுடனான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதும் தான் இந்திய பிரமுகர்கள் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

வீடியோசிட்டே 2018ல் அமைக்கப்பட்ட இந்திய அரங்கில் இந்திய திரைப்படங்களில் பாரம்பரியம், இந்தியாவில் எவ்வளவு எளிதாக திரைப்பட படப்பிடிப்பு செய்யலாம் என்பதை எடுத்துரைப்பதோடு இந்தியாவில் உள்ள படப்பிடிப்பு தளங்கள், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாக்கள், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த படங்கள், இந்தியா மற்றும் இத்தாலி இணைந்த ஆடியோ விஷுவல் உற்பத்தி அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருந்தன.

சாலோ ஜீத் ஹெயின், வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், சின்ஜர், டேக் ஆப், லடாக் சலே ரிக்ஷாவாலா, நியூட்டன், கஹானி மற்றும் குவின் ஆகிய இந்திய திரைப்படங்கள் வீடியோசிட்டேயில் திரையிடப்பட்டன. மேலும், வீடியோசிட்டேவில் அமைக்கப்பட்ட இந்திய அரங்கில் கதக், பாரத நாட்டியம், ஸூபி பாடல்கள், யோகா, பாலிவுட் பாடல்கள்மற்றும் நடனங்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Source : PIB

Share