செய்திகள்

மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 50% மக்கள் விருப்பம் : கருத்து கணிப்பில் தகவல்

பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று பெரும்பாலான இந்தியர்கள் விரும்புகிறார்கள்.

‘டெய்லி ஹன்ட்’ என்ற, ஆங்கில இணையதள பத்திரிகை மற்றும், நீல்சன் இந்தியா என்ற ஆய்வு நிறுவனம் இணைந்து, சமீபத்தில் அரசியல் கருத்துக் கணிப்பு நடத்தின.

இதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி குறித்தும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டன.

மொத்தம், 54 லட்சம் பேர், இந்த, ‘ஆன்லைன்’ கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். இதில், 63%-க்கும் அதிகமானோர், நரேந்திர மோடியின் நான்காண்டு கால ஆட்சி திருப்திகரமாக இருப்பதாகவும், கடந்த தேர்தலின் போது, அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை, தற்போதும் தொடர்வதாகவும் பதில் அளித்தனர்.

மேலும், ‘மோடி இரண்டாவது முறையாக பிரதமரானால், நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்’ என, 50%-க்கும் அதிகமானோர் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.

‘நெருக்கடியான நேரத்தில், நாட்டை சிறப்பாக வழிநடத்தும் தலைவர் யார்’ என்ற கேள்விக்கு, ‘மோடி’ என, 62 சதவீதத்தினரும், ‘ராகுல்’ என, 17 சதவீதத்தினரும் பதில் அளித்து இருந்தனர்.

இதனை அடுத்து, பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என்றும் ராகுல் காந்தியை பிரதமராக்க இந்தியர்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Inputs from Dinamalar

Tags
Show More
Back to top button
Close
Close