செய்திகள்

டிஜிட்டல் சமூகமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஐ.டி. ஊழியர்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும் : மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் அழைப்பு

உண்மையான டிஜிட்டல் சமூகமாக இந்தியாவை மாற்ற ஐ.டி. ஊழியர்கள் தலைமையில் தேசிய இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். உதவி தேவைப்படுகின்ற மற்றும் வசதி வாய்ப்பற்ற பிரிவினரை அணுகி அவர்கள் டிஜிட்டல் அறிவை பெறுவதற்கு ஐ.டி. சமூகத்தினர் அவர்களை சென்றடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாறிவரும் இந்தியாவை டிஜிட்டல் சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அரசு அடைவதற்கும்அரசின் சேவைகள் மற்றும் முன் முயற்சிகளில் இருந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும்பயனடைவதற்கான நடவடிக்கைகள்வேகம் பெறுவதற்கும் இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதுமை கண்டுபிடிப்புக்கான வாய்ப்பை அனைவருக்கும் வழங்குவதற்காக திறந்த நிலை தகவல் மேடையில் அரசு இரண்டு லட்சம் தகவல் விவரங்களை வெளியிட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்தத் தகவல்கள் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைப்பதை அரசு ஊக்கப்படுத்தாது என்றும், பெரும்பாலான மக்களின் ஈடுபாடு இருக்கும் போதுதான் இந்த முன் முயற்சிகள் சிறந்த பயன்களைத்தரும் என்றும் அவர் தெரிவித்தார்.சமூக ஊடகத்தின் சுதந்திரத்திற்கு அரசு ஆதரவாக உள்ளது என்று குறிப்பிட்ட திரு.பிரசாத், இருப்பினும், தேசிய கட்டமைப்பை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகபட்ச கவனம் இருக்க வேண்டும் என்றார்

Tags
Show More
Back to top button
Close
Close