அரசியல்இந்தியா

ராகுல் காந்தி முன்னிலையிலேயே காங்கிரஸ் தலைவர்கள் கோஷ்டி மோதல்

மத்திய பிரதேச சட்டசபைக்கு, இம்மாதம், 28ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில், முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றன.

தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, கட்சியின் தேர்தல் கமிட்டியின் கூட்டம், டில்லியில், ராகுல் முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது, வேட்பாளர்கள் தேர்வு குறித்து, சிந்தியாவுக்கும், திக்விஜய் சிங்குக்கும் மோதல் ஏற்பட்டது என்று தினமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இருவரும், ராகுல் முன்னிலையிலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் கோபம் அடைந்த ராகுல், கூட்டத்திலிருந்து வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. பிரச்னைக்கு தீர்வு காண, கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட், வீரப்ப மொய்லி, அகமது படேல் ஆகியோர் அடங்கிய குழுவிடம் பேச்சு நடத்தும்படி, இருவருக்கும் ராகுல் உத்தரவிட்டார். ஆனால், ‘அவர்கள் பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை’ என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Tags
Show More
Back to top button
Close
Close