செய்திகள்

கோவில் விழாக்களின் போது, கொண்டாட்டம் என்ற பெயரில் மேடையில் நடத்தப்படும் ஆபாச நடனங்களுக்கு தடை, மீறினால் கடும் தண்டனை – உயர்நீதி மன்றம் அதிரடி

தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி தோரும் கோயில்கள் நிறைந்துள்ளன. ஆண்டுதோறும், அனைத்து கோயில்களிலும் திருவிழா நடப்பது வழக்கம். தீச்சட்டி, அழகு குத்து, காவடி, பால் கூடம், பூச்சட்டி எடுத்தல் என விமர்சையாக பத்து நாட்களுக்கு நடைபெறும். அனைத்தும் காலை வேளையில் நடக்கும். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். கிராமப்புர கோயில்களில் இரவில் தான் அதிகமாக நிகழ்ச்சிகள் நடக்கும். அதற்கு கூட்டமும் அதிகமாக சேரும்.

இந்த நிலையில், கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது, உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து, கோயில் திருவிழாக்களில் கலை மற்றும் பாரம்பரிய, கலாச்சார நிகழ்ச்சிகள் காலம் காலமாக நடைபெற்று வருவதால், அதற்கு அனுமதி வழங்கும்படி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முன்பெல்லாம் திருவிழாக்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆனால் தற்போது புதுவிதமான பல நடனங்கள் அறிமுகமாகியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
கோயிலில் நடக்கும் விழாக்களை காவல் துறையினரின் மேற்பார்வையில் வீடியோவாக முழுமையாக பதிவு செய்யவும், நிகழ்ச்சிகளில் ஆபாசம் ஏதும் இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இளைஞர்களுக்கு உதவும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதேபோல், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஆபாச காட்சிகள், ஆபாச வசனங்கள் இடம்பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மேலும் நடவடிக்கை பாயவேண்டும்.

Tags
Show More
Back to top button
Close
Close